" www.karuppankaruppan.blogspot.in'>முகப்பு
  • எங்களைப்பற்றி
  • தொடர்புக்கு
  • Sitemap ▼
  • Tuesday, 4 October 2011

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: சோதிக்கு தங்கம்!


    உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியின் டபுள் டிராப் பிரிவில், இந்தியாவின் ரஞ்சன் சோதி தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தார்.
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளின் டபுள் டிராப் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஞ்சன் சோதி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    முன்னதாக, கடந்த உலக கோப்பையில் இதே பிரிவில் சோதி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம், உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.

    அடுத்த ஆண்டு பிரிட்டனின் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு சோதி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டதும் கவனத்துக்குரியது.

    No comments:

    Post a Comment